செம்மரக்கட்டைகள் விற்ற 2 பேர் கைது

செம்மரக்கட்டைகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
செம்மரக்கட்டைகள் விற்ற 2 பேர் கைது
Published on

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா கரடி மனே கிராமத்தில் சட்டவிரோதமாக செம்மரக்கட்டைகள் விற்பனை செய்யப்படுவது பற்றி கனகபுரா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, செம்மரக்கட்டைகள் விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில், கனகபுரா போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் செம்மரக்கட்டைகள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், கரடி மனே கிராமத்தை சேர்ந்த கிரண் மற்றும் குருபேட்டை கிராமத்தை சேர்ந்த அனில்குமார் என்று தெரிந்தது. ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து ராமநகரில் 2 பேரும் விற்றது தெரிந்தது. அவர்களிடம் இருந்து 11 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான 2 பேர் மீதும் கனகபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com