முன்னாள் மத்திய மந்திரி பூட்டா சிங்கின் மகன் காலமானார்

முன்னாள் மத்திய மந்திரி பூட்டா சிங்கின் மகன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.வான அரவிந்தர் சிங் காலமானார்.
முன்னாள் மத்திய மந்திரி பூட்டா சிங்கின் மகன் காலமானார்
Published on

புதுடெல்லி,

டெல்லி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அரவிந்தர் சிங் (வயது 56). அவர் மாரடைப்பினால் நேற்று காலமானார். கடந்த 2008ம் ஆண்டு தியோலி தொகுதியில் இருந்து அவர் சட்டசபை உறுப்பினராக தேர்வானார்.

முன்னாள் மத்திய மந்திரி பூட்டா சிங்கின் மகனான இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

அவரது இறுதி சடங்குகள் டெல்லியில் உள்ள லோதி நகரில் நடைபெறும் என டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தெரிவித்து உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com