

திருவனந்தபுரம்,
கேரளம் மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு கரிக்குழியில் வசித்து வருபவர் அகிலா. இவருடைய மகன் அர்ஷித் (வயது 1). சம்பவத்தன்று குழந்தை அர்ஷித், வாந்தி எடுத்ததாக கூறி அகிலா அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.
அதே சமயத்தில் குழந்தையின் உடலில் காயங்கள், சிராய்ப்புகள் இருந்ததை பார்த்து அகிலாவின் தாயார் ரீனா அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக பாட்டி ரீனா நெடுமங்காடு போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையில் இறங்கினர்.
அதன்படி குழந்தை அர்ஷித் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவில், நெஞ்சை பதற வைக்கும் கொடூர கொலை சம்பவம் அம்பலமானது.
அதாவது அர்ஷித் உடல் மட்டுமின்றி பிறப்புறுப்பு உள்பட 51 இடங்களில் ரத்த காயங்களும். தீக்காயமும் இருப்பது தெரிய வந்தது. எனவே குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர்.
இதையடுத்து குழந்தையின் தாயார் அகிலாவை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், குழந்தையை அகிலாவின் கள்ளக்காதலன் கொடூரமாக கொன்ற திடுக்கிடும் தகவல் வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது.
அதாவது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அகிலா 3 மாத கர்ப்பிணியாக இருந்த போது அவரது கணவர் அகில் தற் கொலை செய்துள்ளார். பின்னர் அகிலாவுக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அர்ஷித் என பெயர் சூட்டினார்.
இதற்கிடையே அகிலாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த டிரைவரான அஸ்கர் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற் பட்டு கள்ளக்காதலாக மாறியது.
ஒரு கட்டத்தில் இருவரும் கணவன்-மனைவியாக ஒரே வீட்டில் வாழ தொடங்கினர். இது அகிலாவின் தாய் ரீனாவுக்கு பிடிக்கவில்லை. அகிலாவும் அஸ்கரும் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால் குழந்தை அர்ஷித்தை, தாய் ரீனா வீட்டில் அகிலா ஒப்படைத்திருந்தார்.
இவ்வாறு மாதங்கள் கடந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகிலா, மகனை தன்னுடன் அழைத்து வந் துள்ளார். ஆனால் குழந்தையை அஸ்கர், அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனை ஒரு கட்டத்தில் அறிந்த பாட்டி ரீனா, குழந்தையை மீட்டு தன்னிடம் ஒப்படைக்கும்படி போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் குழந்தையின் சட்டப்பூர்வ பாதுகாப்பு தாயிடம் தான் உள்ளது என போலீசார் கூறியதால் ரீனாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இந்த நிலையில் சம்பவத்தன்று அஸ்கருடன் அகிலா உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது
குழந்தை அர்ஷித் பசிக்கிறது என்று கதறி அழுதுள்ளான். குழந்தையை பசியைபோக்காமல் கள்ளக்காதலன் பசியை போக்குவதே குறியாக இருந்துள்ளார் அகிலா. ஒரு கட்டத்தில் குழந்தை பசியால் இன்னும் சத்தமாக அழ தொடங்கியது. உல்லாசமாக இருக்கும் போது குழந்தை இப்படி அழுகிறதே என்ற ஆத்திரமடைந்த அஸ்கர், குழந்தையை சுவரில் தூக்கி வீசியதோடு, தலையோடு சுவரில் அடித்துள்ளார். மேலும் சிகரெட்டை பற்ற வைக் கும் 'லைட்டரால் சூடு வைத்துள்ளார். இந்த கொடூர தாக்குதலை தாய் அகிலாவும் கண்டு கொள்ளாமல் இருந்துள் ளார். கள்ளக்காதல் மோகத்தில், அஸ்கர் தன்னுடைய குழந்தைக்கு செய்த சித்ரவதையை மறைக்க போலீசாரிடமும் அகிலா நாடகமாடியுள்ளார்.
நெஞ்சை பதற வைக்கும் இந்த கொலை சம்பவம் கேரளம் மாநிலத்தையே உலுக்கியது. இதையடுத்து தாய் அகிலா வையும், கள்ளக்காதலன் அஸ்கரையும் போலீசார் கைது செய்தனர்.