மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும் - இந்திய கம்யூ. பொதுச்செயலாளர் டி.ராஜா அறிவிப்பு

மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும் என இந்திய கம்யூ. பொதுச்செயலாளர் டி.ராஜா அறிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும் - இந்திய கம்யூ. பொதுச்செயலாளர் டி.ராஜா அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராக தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. டி.ராஜா நியமனம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவர் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நரேந்திரமோடியின் பாசிச கொள்கைகளால் நாடு தற்போது அபாயகரமான நிலையை நோக்கி செல்கிறது. தேர்தலில் இடதுசாரிகள் தோல்வியை தழுவியதன் மூலம் நாடாளுமன்றத்தில் கட்சியின் பலம் குறைந்துள்ளது. இதனால் கட்சியின் செல்வாக்கு குறைந்து விட்டதாக கருத முடியாது. நாங்கள் மக்களை முழுமையாக நம்புகிறோம். மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான எங்களின் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.

இந்தநிலையில் இந்திய கம்யூ. பொதுச்செயலாளர் டி.ராஜாவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதசார்பின்மை, சமூகநீதி ஆகியவற்றின் பாதுகாவலராக, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கொள்கைகளை முன்னெடுத்து சென்று மென்மேலும் பல வெற்றிகளை பெற மனதார வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com