சபரிமலை தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனுவை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

சபரிமலை தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனுவை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
சபரிமலை தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனுவை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
Published on

புதுடெல்லி,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்ததை எதிர்த்து மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு, மனுதாரர்களின் வக்கீல்கள் ஆஜராகி, இந்த மனுக்களை அவசரமாக விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கு நீதிபதிகள், அமர்வில் உள்ள பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா 30-ந் தேதிவரை மருத்துவ விடுப்பில் உள்ளார். அவர் வந்த பிறகுதான் விசாரணைக்கான தேதி முடிவு செய்யப்படும் என்று கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com