மறுஆய்வுக்கு மத்திய அரசு ஆட்சேபனை: ரபேல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு

மத்திய அரசு ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போட்டதில் முறைகேடு நடைபெற்றதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
மறுஆய்வுக்கு மத்திய அரசு ஆட்சேபனை: ரபேல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
Published on

புதுடெல்லி,

யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டவர்கள் இந்த உத்தரவை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்தனர். இதற்காக ஒப்பந்தம் தொடர்பான சில ஆவணங்களையும் தாக்கல் செய்தனர்.

இந்த ஆவணங்களை ஆதாரமாக கருதி ரபேல் வழக்கு உத்தரவை மறுஆய்வு செய்யக்கூடாது என்று மத்திய அரசு தரப்பில் பூர்வாங்க ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்த தீர்ப்பு இன்று (புதன்கிழமை) பிறப்பிக்கப்படும் என்று தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய் தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com