ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசின் அரசாணை செல்லும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசின் அரசாணை செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசின் அரசாணை செல்லும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந் தேதியில் இருந்து, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று அறிவித்ததோடு, இந்த பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, வினியோகம், விற்பனை, பயன்பாடு ஆகிய அனைத்துக்கும் தடை விதிப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசின் அரசாணை செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் பேப்பர் கப்புகள் மீதான தடை உத்தரவை மத்திய அரசின் நடைமுறைகள் அடிப்படையில் மறுபரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com