நாதுராம் கோட்சேவுக்கு கோவில் அமைத்து வழிபாடு

மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு கோவில் எழுப்பப்பட்டது.
நாதுராம் கோட்சேவுக்கு கோவில் அமைத்து வழிபாடு
Published on

போபால்,

மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே, கடந்த 1949ம் ஆண்டு நவம்பர் 15ந் தேதி தூக்கில் போடப்பட்டார். அவரது நினைவு நாளான நேற்று, மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள இந்து மகாசபை அலுவலகத்தில் அவருக்கு கோவில் எழுப்பப்பட்டது.

கோட்சேவின் 32 அங்குல உயர சிலை நிறுவப்பட்டது. சிலைக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அங்கு வந்த பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com