டீ குடித்த போலீசாரை படுகொலை செய்த பயங்கரவாதிகள் சுட்டு கொலை

டீ குடித்த போலீசாரை படுகொலை செய்த பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
டீ குடித்த போலீசாரை படுகொலை செய்த பயங்கரவாதிகள் சுட்டு கொலை
Published on

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் படுகொலை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், காஷ்மீர் மண்டல போலீசார் கூறும்போது, எங்களுடைய சக போலீசாரான முகமது யூசுப் மற்றும் சுஹைல் ஆகியோர் டீ குடித்து கொண்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்டனர்.

அவரை கொன்ற உமர் முஷ்டாக் காண்டே என்ற லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் பயங்கரவாதியை பாம்பூர் பகுதியில் திராங்பல் என்ற இடத்தில் சுட்டு கொன்றுள்ளோம். 3 அடுக்கு கட்டிடத்தில் சிக்கிய காண்டேவை பிடிக்க காலதாமதம் ஏற்பட்டது. கட்டிடத்தின் உள்ளே இருந்தும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

பயங்கரவாதிகளின் பிற குற்ற செயல்களை கவனத்தில் கொள்ளும்போது, இந்த படுகொலையானது மன்னிக்க முடியாத ஒன்றாக உள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com