பாஜக அரசை அகற்ற நேரம் வந்துவிட்டது; ராகுல் காந்தி

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பாஜக அரசை அகற்ற நேரம் வந்துவிட்டது; ராகுல் காந்தி
Published on

டெல்லி,

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக மாணவர்கள் போராட்டம் வெடித்தது. மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையிலொ, பாஜக அரசை அகற்ற நேரம் வந்துவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ பதிவில்,

நமது நாட்டின் கல்வி முறையை சீரமைக்க தர்மேந்திர பிரதானின் ராஜினாமா முக்கிய அடிக்கல்.

நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள். உங்களைப் பார்த்து நாங்கள் அனைவரும் பெருமைப்படுகிறோம்.

தெருக்களில் இறங்கி, ஜனநாயகத்தையும், அரசியல் அமைப்பையும், தங்கள் எதிர்காலத்தையும் காப்பாற்ற திடமாக நின்ற ஒவ்வொரு இளைஞருக்கும், ஒவ்வொரு மாணவருக்கும் மனதார வாழ்த்துகள்.

இன்னும் இரண்டு கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. மாணவர்களையும், இந்தியாவின் எதிர்காலத்தையும் மதித்து பிரதமர் மன்னிப்பு கோர வேண்டும். மாணவர்கள் மீது வன்முறையை ஏவிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழைகள், இந்த அரசால் ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்ட ஒவ்வொரு பிரிவு மக்களுக்கும்... உண்மையான தைரியம் என்பது தனது கவுரவத்துக்காக அரசியல் அமைப்பு ரீதியான வழியில் உறுதியாக நிற்பதில்தான் இருக்கிறது. மத்திய பாஜக அரசை அகற்றும் நேரம் வந்துவிட்டது. பயப்பட வேண்டாம்

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com