இந்தியாவில் மொத்த கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 40 கோடி; மத்திய சுகாதார அமைச்சகம்

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 40 கோடி என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் மொத்த கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 40 கோடி; மத்திய சுகாதார அமைச்சகம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் அவசரகால தேவைக்காக மத்திய அரசு அளித்த அனுமதியை தொடர்ந்து கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. இதன்பின்னர் 18 வயது நிரம்பிய அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள அரசு அனுமதி அளித்தது.

கொரோனா 2வது அலையில் நாட்டில் பாதிப்புகள் திடீர் உச்சம் அடைந்தது. இதனை தொடர்ந்து, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் எண்ணிக்கை உயர தொடங்கியுள்ளது. பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து கொரோனா தடுப்பூசிகளை போட்டு செல்கின்றனர்.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சக செய்தியில், நாடு முழுவதும் இன்று ஒரு நாளில் 38.79 லட்சத்திற்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. இதனால், மொத்த எண்ணிக்கை 40 கோடியாக உயர்ந்து உள்ளது என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com