குடும்பத்தில் 9 பேர் இருந்தும் 5 ஓட்டு மட்டுமே பெற்ற சுயேச்சை வேட்பாளரின் சோகம்

குடும்பத்தில் 9 பேர் இருந்தும் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 5 ஓட்டு மட்டுமே பெற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குடும்பத்தில் 9 பேர் இருந்தும் 5 ஓட்டு மட்டுமே பெற்ற சுயேச்சை வேட்பாளரின் சோகம்
Published on

அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டவர் நீது சட்டர்ன் வாலா. வாக்கு எண்ணிக்கையின்போது அவர் வெறும் 5 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார். நீது சட்டர்ன் வாலா குடும்பத்திலேயே 9 வாக்காளர்கள் உள்ளனர். ஆனாலும் 5 வாக்குகள் மட்டுமே பெற்றது அவருக்கு அதிர்ச்சியை அளித்தது.

இதுபற்றி நிருபர்கள் அவரிடம் உங்கள் குடும்பத்திலேயே உங்களுக்கு ஆதரவு அளிக்காத நிலையில் மக்கள் ஆதரவை எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? என கேட்டனர். அதற்கு நீது சட்டர்ன் வாலா பதில் சொல்ல முடியாமல் குமுறி, குமுறி அழுதார். தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர் என் குடும்பத்தில் உள்ள 9 பேர் எனக்குத்தான் வாக்களித்திருப்பார்கள். ஆனால், எனக்கு வெறும் 5 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது எப்படி? வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்துள்ளனர். தேர்தல் ஆணையம் என்னை ஏமாற்றிவிட்டது. நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக சதி செய்துவிட்டனர். இனி நான் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்று சோகத்துடன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com