‘தேச துரோகிகளை சுட்டுத்தள்ள வேண்டும்’ - மத்திய மந்திரியின் சர்ச்சை கோஷம்

தேச துரோகிகளை சுட்டுத்தள்ள வேண்டும் என்ற மத்திய மந்திரியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
‘தேச துரோகிகளை சுட்டுத்தள்ள வேண்டும்’ - மத்திய மந்திரியின் சர்ச்சை கோஷம்
Published on

புதுடெல்லி,

டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா தலைவரும், மத்திய நிதித்துறை இணை மந்திரியுமான அனுராக் தாகூர் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் எதிர்க்கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடி வருவதை கண்டிக்கும் வகையில், தேசத்தின் துரோகிகளை... என்று அவர் கூட்டத்தை பார்த்து குரல் எழுப்ப, கூட்டத்தினர் சுட்டுத்தள்ள வேண்டும் என்று பதில் தெரிவித்தனர். உடனே தாகூர் கூட்டத்தினரை பார்த்து, கிரிராஜ் சிங் (மற்றொரு மத்திய மந்திரி) போல சத்தமாக சொல்லுங்கள் என்கிறார்.

பா.ஜனதா கட்சியின் கீழ்மட்ட தலைவர்கள் இதுபோன்ற சர்ச்சையில் சிக்கினாலும் ஒரு மத்திய மந்திரியே இதுபோன்ற கருத்து தெரிவிப்பது இதுவே முதல்முறை. இதுபற்றி காங்கிரஸ் பிரசார குழு தலைவர் கீர்த்தி ஆசாத் கூறும்போது, பா.ஜனதா தலைவர்கள்தான் உண்மையான தேச துரோகிகள். அவர்கள்தான் அமைதிக்கும், ஒற்றுமைக்கும் எதிராக வேலை செய்கிறார்கள் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com