இந்திய வானிலை ஆய்வு மையத்தின் டுவிட்டர் கணக்கு சீரானது

மூடக்கப்பட்ட இந்திய வானிலை ஆய்வு மையத்தின் டுவிட்டர் கணக்கு சிறிது நேரத்திற்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்டது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் டுவிட்டர் கணக்கு சீரானது
Published on

புதுடெல்லி,

நாட்டின் தட்பவெப்ப நிலை, மழை, புயல், சூறாவளி காற்று உள்ளிட்ட வானிலை நிலவரங்களை அவ்வப்போது பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி அவர்களை எச்சரிக்கையுடன் இருக்க செய்யும் பணியில் இந்திய வானிலை ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2.46 லட்சம் பேர் பின்பற்றும் இந்த மையத்தின் டுவிட்டர் கணக்கை நேற்று இரவு மர்ம நபர்கள் முடக்கினர். இதுபற்றி இந்திய வானிலை மையத்தின் இயக்குனர்-ஜெனரல் மிருத்யுஞ்ஜெய் மகாபத்ரா செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் டுவிட்டர் கணக்கை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து சிறிது நேரத்துக்குப் பிறகு இந்திய வானிலை மையத்தின் டுவிட்டர் கணக்கு மீட்டெடுக்கப்பட்டது. இதே போல் உத்தர பிரதேச முதல்-மந்திரி அலுவலகத்தின் டுவிட்டர் கணக்கும் நேற்றிரவு திடீரென மர்ம நபர்களால் முடக்கப்பட்டது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com