

லக்னோ,
நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த சட்டத்தை உத்தரபிரதேசத்தில் அமல்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை அமலுக்கு கொண்டு வரும் 3வது மாநிலம் உத்தரபிரதேசம் ஆகும். முதலில் குஜராத் மாநிலமும், 2வதாக ஜார்கண்ட் மாநிலமும் இந்த சட்டத்தை அமல்படுத்தி உள்ளது.
இதற்காக சட்டத்தை முதலில் அமல்படுத்திய குஜராத் மாநில மூத்த அதிகாரிகளுடன் உத்தரபிரதேச அதிகாரிகள் தொடர்பு கொண்டனர். அதைத்தொடர்ந்து இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான அவசர சட்டத்தை அதிகாரிகள் தயாரித்து உள்ளனர். அடுத்த வாரம் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.