சுபாஷ் சந்திர போஸின் வீரம், ஒவ்வொரு இந்தியனையும் பெருமையடையச்செய்கிறது நினைவுகூர்ந்த மோடி!

சுபாஷ் சந்திரபோஸின் 121-வது பிறந்தநாள் இன்று அவரது வீரம் ஒவ்வொரு இந்தியனையும் பெருமையடையச்செய்கிறது மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். #NarendraModi
சுபாஷ் சந்திர போஸின் வீரம், ஒவ்வொரு இந்தியனையும் பெருமையடையச்செய்கிறது நினைவுகூர்ந்த மோடி!
Published on

புதுடெல்லி

இந்திய விடுதலைக்காகப் போராடிய ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திரபோஸின் 121-வது பிறந்தநாள் இன்று. இறந்து பத்தாண்டுகள் ஆன பின்னரும், அவரின் மரணம் சம்பந்தமான சர்ச்சைகள் தொடர்கின்றன. இந்நிலையில், அவரது பிறந்தநாளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அவரது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்குமூலம் ஒரு வீடியோவைத் தரவேற்றி, பதிவு ஒன்றைச் செய்துள்ளார்.

அதில், `சுபாஷ் சந்திர போஸின் வீரம், ஒவ்வொரு இந்தியனையும் பெருமையடையச்செய்கிறது. அவரின் பிறந்தநாளான இன்று, அந்த மாபெரும் ஆளுமையின் முன்னாள் தலைவணங்குகிறோம். மக்களின் எண்ணங்களுக்காக அயராது உழைத்த மிகத் தைரியமான தலைவராக அவர் என்றும் நினைவுகூரப்படுவார்' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com