

நகரி,
தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் கங்காபூரை சேர்ந்த தம்பதி முத்தியம் ரெட்டி-கல்பனா. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கல்பனா நாராயன்கேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றுகிறார். அவருக்கு சிண்டு என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.
சிறிது காலமாக இவர்கள் ரகசியமாக சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்த நிலையில் தாங்கள் சேர்ந்து இருக்க கணவர் தடையாக இருப்பதாக எண்ணிய கல்பனா. அவரை தீர்த்துக்கட்ட சிண்டுவுடன் சேர்ந்து திட்டமிட்டார். நல்ல சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த கல்பனா, சில நாட்களுக்கு முன்பு கணவர் முத்தியம் ரெட்டியை தனது காதலனுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்தார். பின்னர் அங்குள்ள ஒரு மைதானத்தில் அவரது உடலை ஜே.சி.பி. எந்திரத்தின் உதவியுடன் குழி தோண்டி புதைத்து விட்டனர். பின்னர் எதுவும் நடக்கா ததுபோல, தனது கணவரை காணவில்லை என்று கல்பனா போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் முத்தியம் ரெட்டியை தேடி வந்தனர்.
போலீசாரின் விசாரணையில் கல்பனாவின் கள்ளத்தொடர்பு தெரிய வந்தது. அவர்களிடம் துருவித் துருவி விசாரித்தபோது கண வரை கொலை செய்ததை கல்பனா ஒப்புக்கொண்டர். அவர் காட்டிய இடத்தில் இருந்து முத்தியம் ரெட்டி உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இது தொடர்பாக அவர்கள் இருவரும் கைது செய் யப்பட்டனர்.