3 மசோதா தோல்வி: இந்தியப் பெண்கள் காங்கிரசையும் எதிர்க்கட்சிகளையும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் - கிரண் ரிஜிஜு

பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கக் கூடாது என்பதே காங்கிரசின் தெளிவான நோக்கமாக இருந்துள்ளது என கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
3 மசோதா தோல்வி: இந்தியப் பெண்கள் காங்கிரசையும் எதிர்க்கட்சிகளையும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் - கிரண் ரிஜிஜு
Published on

புதுடெல்லி,

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா, மகளில் இட ஒதுக்கீடு மசோதா, யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்களுக்கும் ஆதரவாக 298 உறுப்பினர்களும், எதிராக 230 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

இந்த மசோதாக்கள் வெற்றி பெற மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் ஆதரவாக தேவை. அந்த வகையில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற 326 வாக்குகள் தேவை. அது கிடைக்காத காரணத்தால், மூன்று மசோதாக்களும் தோல்வி அடைந்தன.

இந்தநிலையில், இது குறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜு கூறுகையில்,

இந்தியப் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய உரிமைகளை வழங்காததை காங்கிரஸ் கொண்டாடுகிறது என்றால், இதைவிடப் பெரிய சோகம் வேறு எதுவும் இருக்க முடியாது.இந்தியப் பெண்கள் காங்கிரசையும் எதிர்க்கட்சிகளையும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். உங்களுக்கு தொழில்நுட்பச் சிக்கல்கள் இருந்தால், திருத்தங்களுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். உங்களுக்கு எழுத்துப்பூர்வமாக வேண்டுமென்றால், அதையும் எழுத்துப்பூர்வமாகத் தர நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று உள்துறை மந்திரி அவையில் கூறினார்.

பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கக் கூடாது என்பதே காங்கிரசின் தெளிவான நோக்கமாக இருந்துள்ளது அம்பலமாகியுள்ளது. பெண்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம். காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தாங்கள் பெண்களுக்கு எதிரானவர்கள் என்பதை நிலைநாட்டியுள்ளன. அவர்கள் தங்கள் பாவங்களை வார்த்தைகளால் கழுவிவிட முடியாது என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com