மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு

மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு

மூடிகெரே அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
Published on

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பனக்கல் அருகே உள்ள படவனே தின்னே கிராமத்தைச் சேர்ந்தவர் ஆலேஸ்கவுடா. தொழிலாளி. இவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் ஏறி மரக்கிளையை வெட்டி கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆலேஸ் கவுடா மரத்தி இருந்து தவறி கீழ விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Dailythanthi
www.dailythanthi.com