

புதுடெல்லி,
மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பு அதிகாரி அரிந்தம் பக்சி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அவர் பேசும்பொழுது, ஆப்கானிஸ்தான் நாட்டில் அணைகள், மின்சாரம் மற்றும் சமூக பணிகளை இந்தியா கொண்டு வந்துள்ளது.
ஆனால், பாகிஸ்தான் என்ன கொண்டு வந்தது என உலகம் அறியும். அனைத்து அமைதி திட்ட நடவடிக்கைகளுக்கும் இந்தியா ஆதரவு வழங்கும். ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி மற்றும் மறுகட்டமைப்புக்காக நீண்டகால ஈடுபாட்டோடு இந்தியா செயல்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.