முட்டைகளை அபகரிக்கும் இளம்பெண்... பாய்ந்து தாக்கும் ஆண் மயில் வைரலான வீடியோ

இளம்பெண் ஒருவர் முட்டைகளை அபகரிக்க முயன்றபோது, ஆண் மயில் பாய்ந்து வந்து தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
முட்டைகளை அபகரிக்கும் இளம்பெண்... பாய்ந்து தாக்கும் ஆண் மயில் வைரலான வீடியோ
Published on

புதுடெல்லி,

நம் நாட்டின் தேசிய பறவையாக மயில் உள்ளது. இந்தியாவில் வயல்வெளி உள்ளிட்ட பகுதிகளில் அவை வசித்து வருகின்றன. பொதுவாக, மயில்கள் முட்டையிட்டு, அடைகாத்து குஞ்சு பொரிப்பவை.

பெண் மயில் அடை காக்கும்போது ஆண் மயில் இரை தேடி விட்டு வரும். அது வந்தவுடன் பெண் மயில் இரை தேட செல்லும். அது வரும்வரை ஆண் மயில் முட்டைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும். மனிதர்களுக்கு தொந்தரவு எதுவும் கொடுக்காமல் இருக்க கூடிய மயில்கள் தங்களுக்கு ஆபத்து வரும்போது ஆக்ரோசமடைந்து விடும்.

இந்நிலையில், மயிலின் முட்டைகளை திருட முயன்ற இளம்பெண் ஒருவரை ஆண் மயில் பாய்ந்து விரட்டும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. பெண் மயில் இரை தேட சென்ற சமயத்தில் தோகையுடன் கூடிய ஆண் மயில் முட்டைகளின் மீது அமர்ந்து இருக்கிறது.

அந்த இளம்பெண் மயிலை பிடித்து, தூக்கி வீசுகிறார். ஆனால், மயில் பறக்காமல் இறக்கையை படபடத்து விட்டு, அங்கேயே நிற்கிறது. அந்த பெண் கீழே இருந்த முட்டைகளை ஒன்றாக தூக்கி போட்டு சேகரிக்கிறார். இதனை பார்த்த அந்த ஆண் மயில், பறந்து வந்து முட்டையை திருடும் பெண்ணின் மீது பாய்ந்து கீழே தள்ளுகிறது. இந்த காட்சிகளை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டு உள்ளனர். லைக்குகளும் குவிந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com