மணமகளை ஒரு தலையாக காதலித்த வாலிபர்... திருமண ஊர்வலத்தில் செய்த கொடூர செயல்

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணமகளை ஒரு தலையாக காதலித்த வாலிபர்... திருமண ஊர்வலத்தில் செய்த கொடூர செயல்
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தில் உள்ள துலாபூர் பகதூரன் என்ற கிராமத்தில் திருமண விழா நடந்தது. மணமகன் சுதாமா கவுதம் (வயது 24) குதிரை வண்டியில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் தனது நண்பர்கள் 2 பேருடன் வந்த சச்சின் பிண்ட் (23) என்ற வாலிபர் சுதாமா கவுதம் மீது திராவகத்தை ஊற்றினார். இதில் அவரும், அவருடன் குதிரை வண்டியில் அமர்ந்திருந்த 2 சிறுவர்களும் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் 3 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இதனிடையே மணமகன் மீது திராவகம் வீசி விட்டு தப்பி சென்ற வாலிபர்களை போலீசார் வலை வீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் அந்த 3 வாலிபர்களும் நேற்று போலீசாரிடம் சிக்கினர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் சச்சின் பிண்ட் மணமகளை ஒரு தலையாக காதலித்து வந்ததும், எனவே திருமணத்தை நிறுத்தும் நோக்கில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மணமகன் மீது திராவகம் வீசியதும் தெரியவந்தது.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com