அசாம் ரைபிள்ஸ் படைலாரியில் இருந்து தோட்டாக்கள் திருட்டு

துணைராணுவப் படையான அசாம் ரைபிள்சுக்கு சொந்தமான ஒரு லாரி, டெல்லியில் இருந்து மேகாலயா மாநிலம் ஷில்லாங்குக்கு துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்றிக்கொண்டு சென்றது.
அசாம் ரைபிள்ஸ் படைலாரியில் இருந்து தோட்டாக்கள் திருட்டு
Published on

அந்த லாரி, உத்தரபிரதேச மாநிலம் ஜலேசார் சாலையில் இரவு தங்கலுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டது. இரவில், யாரோ அடையாளம் தெரியாத நபர்கள், லாரியில் இருந்து 180 தோட்டாக்கள், 9 தோட்டா கொள்கலன்கள் கொண்ட 2 பைகளை திருடிச் சென்றுவிட்டனர். இந்த திருட்டு தொடர்பாக அசாம் ரைபிள்ஸ் பிரிவு வீரர் அவதேஷ்குமார், போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com