நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளது : காங்கிரஸ் பாய்ச்சல்

மாணவி சோபியா கைது விவகாரத்தில் நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை இருப்பதாக காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது.
நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளது : காங்கிரஸ் பாய்ச்சல்
Published on

புதுடெல்லி,

தூத்துக்குடி விமானத்தில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக கோஷமிட்டு, அந்தக் கட்சியின் தமிழக தலைவர் தமிழிசையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவி சோபியா கைது செய்யப்பட்ட விவகாரம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதை காங்கிரஸ் கட்சி, நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை இருப்பதாக கூறி கடுமையாக சாடியது.

இதுபற்றி அந்த கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரி, டெல்லியில் நேற்று கருத்து தெரிவிக்கையில், இது அறிவிக்கப்படாத அவசர நிலை இல்லை என்றால், இந்த சூழ்நிலையை நீங்கள் என்னவென்று அடையாளப்படுத்துவீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் கூறும்போது, தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் நடந்து இருப்பது, கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்தும் உரிமை மீதான தாக்குதல் மட்டுமல்ல; நமது அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதலும் மட்டுமல்ல. இது இந்திய அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல்; ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com