காஷ்மீர் பிரச்சினையை தீர்க்காமல் ‘துணைக்கண்டத்தில் அமைதிக்கு வாய்ப்பு இல்லை’ - மெகபூபா பேச்சு

காஷ்மீர் பிரச்சினையை தீர்க்காமல் இந்திய துணைக்கண்டத்தில் அமைதிக்கு வாய்ப்பு இல்லை என்று மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பிரச்சினையை தீர்க்காமல் ‘துணைக்கண்டத்தில் அமைதிக்கு வாய்ப்பு இல்லை’ - மெகபூபா பேச்சு
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி, குல்காமில் தனது மக்கள் ஜனநாயக கட்சி தொண்டர்கள் மத்தியில் நேற்று பேசினார். அப்போது அவர், காஷ்மீர் பிரச்சினையை தீர்க்காமல், துணைக்கண்டத்தில் அமைதிக்கு வாய்ப்பே இல்லை. கடந்த கால சம்பவங்களை மறந்து விட்டு, இந்தியா, பாகிஸ்தான் உறவை முன்னெடுத்துச் செல்வதற்கு அந்த நாட்டின் ராணுவ தளபதி அழைப்பு விடுத்தது சாதகமான முன்னேற்றம் ஆகும் என கூறினார்.

மேலும், புதுப்பிக்கப்பட்ட இரு தரப்பு உறவு என்பது காஷ்மீர் மக்களின் நீண்ட கால அரசியல் மற்றும் ஜனநாயக கோரிக்கைகளை கவனிப்பதற்கான முன்னேற்றத்துக்கானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com