மசூதியை யார் கட்டியது என்பதற்கான ஆதாரம் இல்லை - அயோத்தி வழக்கில் மூத்த வக்கீல் வாதம்

மசூதியை யார் கட்டியது என்பதற்கான ஆதாரம் இல்லை என அயோத்தி வழக்கில் மூத்த வக்கீல் வாதாடினார்.
மசூதியை யார் கட்டியது என்பதற்கான ஆதாரம் இல்லை - அயோத்தி வழக்கில் மூத்த வக்கீல் வாதம்
Published on

புதுடெல்லி,

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு முன்பு நேற்று 15-வது நாளாக விசாரணை தொடர்ந்தது. ராமஜென்ம பூமி புனர்உத்தார் சமிதி என்ற அமைப்பின் தரப்பில் வாதாடிய மூத்த வக்கீல் பி.என்.மிஸ்ரா வாதாடியதாவது:-

அயோத்தியில் உள்ள கட்டிடம் எந்தவகையிலும் மசூதியின் சாயலில் இல்லை. பலகாலமாக இந்துக்கள் இந்த இடத்தை ராமர் பிறந்த இடமாக கருதி வழிபாடு நடத்தி வருகின்றனர். சர்ச்சைக்குரிய கட்டிடம் கி.பி. 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்ற சன்னி வக்பு வாரியத்தின் வாதம் தவறானது, அடிப்படையற்றது. அவுரங்கசீப் காலத்தில் இங்கு இருந்த கோவில் இடிக்கப்பட்டு இருக்கலாம். பாபருக்காக அவருடைய தளபதி என்று கூறப்பட்ட மீர்பாகி மசூதியை கட்டினார் என்பதற்கான சரியான ஆதாரம் எதுவும் கிடையாது. பாபர், ஹூமாயூன், அக்பர், ஜஹாங்கீர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான நூல்கள் எதிலும் இதுபற்றிய குறிப்பு இல்லை.

இவ்வாறு அவர் வாதாடினார். விசாரணை இன்றும் (வெள்ளிக்கிழமை) தொடருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com