நாட்டில் எரிபொருளுக்கு பற்றாக்குறை இல்லை: ராஜ்நாத் சிங்

இந்திய கடற்படைக்கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நாட்டின் எண்ணெய்க்கப்பல்களுக்கு பாதுகாப்பாக அழைத்துச்செல்கிறது.
நாட்டில் எரிபொருளுக்கு பற்றாக்குறை இல்லை: ராஜ்நாத் சிங்
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் 140 தொகுதிகளுகான சட்டமன்றத் தேர்தல் எப்ரல் 9ந் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் இன்று கேரளாவில் நடைபெற்ற சைனிக் சம்மான் பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்:-

பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறுகையில் ‘நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயுக்கு பற்றாக்குறை இல்லை என்றும் மேற்கு ஆசிய மோதலால் ஏற்படும் எந்தவொரு எரிசக்தி நெருக்கடியையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இந்திய கடற்படைக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நாட்டின் எண்ணெய்க் கப்பல்களுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறது.

மேலும், வளைகுடா பிராந்தியத்தில் இந்திய நலன்களைப் பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடி தனது ராஜதந்திரங்களை பயன்படுத்தி வருவதாகவும் மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் சூழலை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் மேலும் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கத் தயாராக இருக்கிறோம்.

மாநிலத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான சரியான அரசியல் கட்சி பாஜக என்றும் அது மோடியின் உத்தரவாதங்களை கொண்டது எனவே சட்டமன்றத் தேர்தலில் பாஜகவைத் தேர்ந்தெடுக்குமாறு அவரது தலைமை 24 காரட் தங்கம் போன்றது அது சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டது’ இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com