

புதுடெல்லி,
டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்த நிகழ்வில் சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியிடப்பட்டது.
டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்த நிகழ்வில் சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியிடப்பட்டது டெல்லி ஐடிசி ஓட்டலில் நடைபெறும் 'Belonging: A Journey of Love' நூல் வெளியிடப்பட்டது. புத்தக வெளியீட்டு விழாவில் தாய் சோனியா காந்திக்கு ராகுல், பிரியங்கா வாழ்த்து கூறினர்.
"எனது கணவர் (ராஜீவ் காந்தி) அரசியலுக்கு வருவதை நான் மிகவும் எதிர்த்தேன். ஏனெனில், எனது மாமியார் (முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி) தனது வாழ்நாள் முழுவதையும் அரசியல் பணிக்காகவே அர்ப்பணித்ததை இத்தனை ஆண்டுகளாக நான் பார்த்திருக்கிறேன். அதனால், எனது கணவரும் அரசியலுக்கு வந்தால், அவரை நான் இழக்க நேரிடும் என்று ஒருவிதத்தில், சுயநலமாகக்கூட நினைத்தேன்.
ராஜீவ் அரசியலில் ஈடுபடத் தொடங்கிய பிறகு, அவர் எப்போதும் பயணங்களிலேயே இருக்க வேண்டியிருந்தது. இதனால் எங்களது குடும்ப வாழ்க்கை முற்றிலும் மாறியது. இருப்பினும், எங்களுக்கிடையிலான அன்பும் பிணைப்பும் மேலும் வலுவடைந்தன. ஏனெனில், எங்களுடன் நேரம் செலவிட அவருக்குக் கிடைத்த குறைந்த நேரத்தைக்கூட நாங்கள் மிகவும் மதிப்புமிக்கதாகக் கருதினோம். நானும் எனது குழந்தைகளும் அந்தத் தருணங்களை மிகவும் முக்கியமானதாக உணர்ந்தோம்.
நான் இந்திரா காந்தியைக் கண்டு பிரமித்தேன். அவர் அஞ்சத்தக்கவராக இருந்தார். நான் அவருக்குப் பயந்தேன்.
இந்திரா காந்தியைப் பார்த்தாலே எனக்குப் பயமாக இருக்கும். அவரை எப்படி அணுகுவது, என்ன பேசுவது என்று தெரியாது. ராஜீவும், சஞ்சய் காந்தியும் அவரை 'மா' என்று அழைப்பார்கள். ஆனால், என்னால் அப்படி அழைக்க முடியவில்லை. ஏனெனில், எனக்கு ஒரே ஒரு அம்மாதான்... அவர் இத்தாலியில் இருக்கும் எனது தாயார். அவர் கோபப்படும்போது எனது தந்தையை நினைவுபடுத்துவார். அப்போது நான் பயத்தில் உறைந்துவிடுவேன். ராஜீவும், சஞ்சய் காந்தியும் அவரது கோபம் தணியும் வரை அமைதியாகக் காத்திருப்பார்கள்.
ராகுல் மற்றும் பிரியங்கா பிறந்த பிறகு இந்திரா காந்தி முற்றிலும் மாறிவிட்டார். அவர் மிகவும் மென்மையானவராகவும், மற்றவர்களைப் புரிந்துகொள்பவராகவும் மாறினார்.
நான் இந்தப் புத்தகத்தை எழுதத் தேர்ந்தெடுத்ததற்கு ஒரு காரணம், பல விஷயங்கள் கூறப்படுகின்றன, அவற்றில் பெரும்பாலானவை முற்றிலும் உண்மையற்றவை; ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பிறகு நான் குழந்தையாகவும், ராகுலும் பிரியங்காவும் பெற்றோராகவும் ஆனார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் அரசியல் பயணத்தை விவரிக்கும் காணொலி வெளியிடப்பட்டது. அதனை அரசியல் தலைவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாறு குறித்த காணொளியை ஒளிபரப்பிய போது முதல்-அமைச்சர் விஜய் உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் உற்று கவனித்தனர்.
சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் முதல் வரிசையில் ராகுல் காந்திக்கு அருகில் அமர்ந்தார் முதல்-அமைச்சர் விஜய்.பின் வரிசையில் காங்கிரஸ் முதல்-மந்திரிகள் டி.கே.சிவக்குமார் மற்றும் ரேவந் ரெட்டி அமர்ந்திருந்தனர்.