தமிழ்நாட்டில் 29 தொகுதிகளே இருக்கும் - பா.ஜனதா எம்.பி. சொல்கிறார்

தென்னிந்தியாவுக்கு காங்கிரஸ் இவ்வளவு பெரிய அநீதியைச் செய்யும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.
தமிழ்நாட்டில் 29 தொகுதிகளே இருக்கும் - பா.ஜனதா எம்.பி. சொல்கிறார்
Published on

புதுடெல்லி,

2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை அமல்படுத்துவதற்காக மத்திய அரசு கொண்டு வந்த அரசியலமைப்பின் 131-வது பிரிவு திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் தோல்வி அடைந்தது. இதுபற்றி ஆளும் தரப்பின ரும், எதிர்க்கட்சியினரும் பல்வேறு கருத்துகளை கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் துபே, தமிழ்நாட்டுக்கு 29 தொகுதிகளே கிடைக்கும் என்று கூறினார். இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது:-

இதைவிட துரதிர்ஷ்டவசமானது வேறு என்ன இருக்க முடியும்? 2023-ம் ஆண்டு மகளிர் இடஒ துக்கீட்டு மசோதா அப்படியே செயல்படுத்தப்பட்டால் 2026-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெ டுப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள 39 இடங்களில் 29 இடங்கள் மட்டுமே மீதமிருக்கும்.

அதே போல, கேரளாவில் உள்ள 20 இடங்கள் 14 இடங்களாக குறைந்து விடும். தென்னிந்தியாவுக்கு காங்கிரஸ் இவ்வளவு பெரிய அநீதியைச் செய்யும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. மு.க.ஸ்டாலினும் இப்படி ஒரு காரியத்தைச் செய்வார் என்று நான் நினைத்ததில்லை. தென்னிந் தியாவைக் கையாள எதிர்க்கட்சிகள் ஒரு பெரிய சதித்திட்டத்தை தீட்டியுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com