உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் மீது தாக்குதல் முயற்சி

கூச்சலிட்டபடி உச்சநீதிமன்ற நீதிபதியை நோக்கி காலணியை ஒருவர் வீச முயற்சித்த நிலையில் அவரை காவலர்கள் பிடித்து இழுத்து சென்றுள்ளனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் மீது தாக்குதல் முயற்சி
Published on

புது டெல்லி,

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது தாக்குதல் முயற்சி நடைபெற்றுள்ளது. வழக்கறிஞர் ஒருவர்   காலணியை வீச முயற்சித்துள்ளார். கூச்சலிட்டபடி உச்ச நீதிமன்ற நீதிபதியை நோக்கி காலணியை ஒருவர் வீச முயற்சித்த நிலையில் அவரை காவலர்கள் பிடித்து இழுத்து சென்றுள்ளனர்.இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இதுபோன்ற சம்பவங்கள் என்னை பாதிக்காது என்று கூறியுள்ளார். மேலும், அனைத்து மதங்களையும் மதிப்பவன் நான் என்றும் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கூறியுள்ளார்.

விஷ்ணு சிலை புதுப்பிப்பு குறித்த வழக்கை விசாரித்த போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர், இத்தகைய செயலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. சனாதனத்தை அவமதிப்பதா? என உச்ச நீதிமன்ற நீதிபதியை நோக்கி அந்த வழக்கறிஞர் கூச்சலிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com