

மாணவர்களுக்கு எதிரான அநீதி, தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு உள்ளிட்டவை எதிர்த்து சமூக வலை தளத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் ஒரு கணக்கை அபிஜித் தீப்கே தொடங்கினார். இது இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியைத் தொடங்கிய அபிஜித் திப்கே, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். அவர் பதவி விலகும் வரை ஓயமாட்டோம் என்று தெரிவித்தார்.
அபிஜித் திப்கே பேசுகையில், "நான் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். நாட்டில் உள்ள அனைத்து பகுதி இளைஞர்களும் இங்கு உள்ளனர். நீதி கிடைக்கும் வரை இங்கே போராட்டம் நடத்த விரும்புகிறார்கள். எங்களுடைய போராட்டத்திற்கான அனுமதியை நீடிக்க டெல்லி காவல்துறைக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.
போராட்டம் அமைதியாக நடைபெற்றுள்ளது. நாங்கள் இங்கே அமர விரும்பும் அப்பாவி மாணவர்கள். நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். எங்கள் ஒரே நிபந்தனை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். டெல்லி போலீசார் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கைது நடவடிக்கை எடுக்கப்பட்டால், நானே முதலில் முன்வந்து கைதாவேன்” என்றார்.
போராட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் போராட்டக்காரர்கள் கலையாமல் போராட்டத்தை நடத்தி வரும் டெல்லி ஜந்தர் மந்தரில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதற்கு மத்தியில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஆப்ஜித் தீப்கே, என்னை போலீசார் கைது செய்யலாம் எனவும், கைது செய்தால் அறவழியில் நாடு முழ்வதும் கரப்பான் பூச்சி ஆதரவாளர்கள் போராடத்தை தொடர வேண்டும்” என்று கூறியுள்ளார்.