

சென்னை,
கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை இது குறித்து கூறியிருப்பதாவது:-
மேகதாது அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்துள்ளோம். நான் டெல்லி சென்றபோது மத்திய அரசு இதுபற்றி பரிசீலிப்பதாக தெரிவித்தனர். விரைவில் டெல்லி செல்லவுள்ளேன். மத்திய அமைச்சர்களை சந்திக்கவுள்ளேன்.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பற்றியும் தற்போதைய நிலவரம் குறித்த விரிவாக விளக்கவுள்ளேன். மேகதாது அணைக்கு ஒப்புதல் தருவதாக நான் டெல்லி சென்றபோது அமைச்சர்கள் கூறினார்கள் என்றார்.