ஆக்ராவில் ரூ.30 லட்சத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை திருடிச் சென்ற திருடர்கள்..!

ஏடிஎம்மில் சுமார் 30 லட்சம் ரூபாய் பணம் இருந்ததாக வங்கி கிளை மேலாளர் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

ஆக்ரா,

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், சுமார் 30 லட்சம் ரூபாய் பணம் இருந்த எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை திருடிச் சென்றுள்ளனர்.

ககரோல் பஸ் ஸ்டாண்டு அருகில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம்மில் இன்று அதிகாலை 2.45 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் ஏடிஎம் இயந்திரத்தை திருடிச் சென்றுள்ளனர். ஏடிஎம்மில் இருந்து திடீரென சத்தம் கேட்டதும் சம்பந்தபட்ட வங்கி கிளை இருக்கும் வீட்டின் உரிமையாளர் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார்.

அவர் கூச்சலிடவும், திருடர்கள் ஏடிஎம் இயந்திரத்தை தூக்கிவிட்டு வேனில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து வங்கி கிளை மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார், வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏடிஎம்மில் சுமார் 30 லட்சம் ரூபாய் பணம் இருந்ததாக வங்கி கிளை மேலாளர் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com