புல்டோசரை கொண்டு வந்து ஏ.டி.எம் இயந்திரத்தை தூக்கி சென்ற திருடர்கள்..! வைரலாகும் வீடியோ

ஏ.டி.எம் இயந்திரத்தை அப்படியே பெயர்த்து எடுத்துக் கொண்டு போன சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
புல்டோசரை கொண்டு வந்து ஏ.டி.எம் இயந்திரத்தை தூக்கி சென்ற திருடர்கள்..! வைரலாகும் வீடியோ
Published on

மும்பை,

சமூகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் திருட்டு, கொள்ளை போன்ற பல குற்ற சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. அதற்கு அதிகரித்து வரும் விலைவாசியும், வேலையில்லா திண்டாட்டமும் காரணமாக கருதப்படுகிறது.

ஏ.டி.எம் மையத்தில் பணம் கொள்ளை போனது என்ற செய்தியை பலமுறை நாம் கேள்விபட்டிருக்கிறோம். ஆனால், ஏடிஎம் இயந்திரத்தை அப்படியே பெயர்த்து எடுத்துக் கொண்டு போன சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

புல்டோசர் கொண்டு ஏ.டி.எம் இயந்திரம் அபேஸ்

மராட்டிய மநிலம் சாங்க்லீ பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம் மையத்தில், நேற்று ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் ஜேசிபி வாகனத்தை கொண்டு வந்து, ஏடிஎம் மையத்தின் சுவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் ஏடிஎம் இயந்திரத்தை மட்டும் லாவகமாக தகர்த்து எடுத்துக்கொண்டு போய் உள்ளனர் மர்ம நபர்கள்.

ஏ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோ, இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இதனையடுத்து இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com