3-வது முறையாக அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் அருகே வெடி விபத்து சம்பவம்: 5 பேர் கைது

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோயில் அருகே 3-வது முறையாக நள்ளிரவில் வெடி விபத்து தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3-வது முறையாக அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் அருகே வெடி விபத்து சம்பவம்: 5 பேர் கைது
Published on

அமிர்தசரஸ்,

பொற்கோயில் அருகே ஸ்ரீ குரு ராமதாஸ் ஜி நிவாஸ் விடுதியின் வெளியே வெடிகளை பயன்படுத்தி விபத்தை நிகழ்த்தியுள்ளனர்.

அமிர்தசரஸ் பொற்கோயில் அருகே கடந்த சில நாட்களாக சிறிய அளவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து வருகிறது. இந்த வாரத்தில் 3வது வெடிப்பு சம்பவம் இதுவாகும். பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் குண்டு வெடிப்பை நடத்தியதாக கைதான 5 பேரும் விசாரணையில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பஞ்சாப் டிஜிபி கௌரவ் யாதவ் கூறுகையில்,

குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேரைக் கைது செய்துள்ளோம். மேலும், இவர்கள் 5 பேரும் பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், பட்டாசு தயாரிக்கும் பொருள்களை கொண்டு குண்டுவெடிப்பு நிகழ்த்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். காவல்துறை தரப்பில் இன்று பஞ்சாப் காவல்துறை காலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செய்தியாளர்கள் சந்திப்பின்போது முழு விவரங்கள் அளிக்கப்படவுள்ளன. மே 6 மற்றும் 8 ஆம் தேதிகளில் குண்டுவெடிப்புகளும் நடந்தன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com