பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 13 பேர் உயிரிழப்பு

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்-மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

பாட்னா,

பீகாரில் நேற்று பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் ஆங்காங்கே மின்னல் தாக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக மின்னல் தாக்கியதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதிகபட்சமாக பெகுசராய் மாவட்டத்தில் 5 பேர் மின்னலுக்கு பலியாகினர். தர்பங்காவில் 4 பேர், மதுபானியில் 3 பேர் மற்றும் சமஸ்திபூரில் ஒருவர் என ஒரே நாளில் 13 பேர் பலியாகி உள்ளனர். மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் பேரிடர் மேலாண்மை துறையின் அறிவுரைகளை பின்பற்றுமாறு அவர் மாநில மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com