

திருப்பதி,
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ்பெற்ற இந்து மதக்கடவுள் ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் சாமி தரிசனம் செய்தார்.
பாதுகாப்புத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழுவினர் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். 10 எம்.பி.க்கள் கொண்ட இந்த குழுவில் திருமாவளவன் இடம்பெற்றிருந்தார். இந்த குழுவினர் இன்று திருப்பதிக்கு வந்த நிலையில் திருமாவளவன் உள்பட 10 எம்.பி.க்களும் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.