பராமரிப்பு பணி காரணமாக திருவனந்தபுரம் - திருச்சி தினசரி ரெயில் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக திருவனந்தபுரம் - திருச்சி தினசரி ரெயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணி காரணமாக திருவனந்தபுரம் - திருச்சி தினசரி ரெயில் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
Published on

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரம் - திருச்சி இடையே இயக்கப்பட்டு வரும் தினசரி ரெயில், இன்று தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வேயின் திருவனந்தபுரம் மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருநெல்வேலி - தாழையூத்து மற்றும் கடம்பூர் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே, திருச்சி-திருவனந்தபுரம் தினசரி ரெயில் (எண். 02627) மற்றும் திருவனந்தபுரம் - திருச்சி ரெயில் (02628) இன்று (வெள்ளிக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது. முன்பதிவு செய்த பயணிகள் பணத்தை திரும்ப பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com