இந்தியர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது பிரதமர் பாராட்டு

இந்தியர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி உள்ளார். #NarendraModi #Budget2018 #UnionBudget2018
இந்தியர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது பிரதமர் பாராட்டு
Published on

புதுடெல்லி

2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இதை தாக்கல் செய்கிறார்.

அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும். தேர்தலுக்கு பிறகு அமையும் அரசுதான் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். எனவே, தேர்தலுக்கு முந்தைய கடைசி முழுமையான பட்ஜெட் இதுவாகும்.

மேலும், சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமலுக்கு வந்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதலாவது பட்ஜெட்டும் இதுதான்.

பட்ஜெட் தாக்கல் செய்ய நாடாளுமன்றத்திற்கு வந்தார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி. படஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக அமைச்சர்வை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு அனுமதி வழங்கபட்டது. இதை தொடர்ந்து அருண் ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்தியர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி உள்ளார்,

மேலும் அவர் கூறியதாவது:-

பட்ஜெட்டில் விவசாயிகளின் அச்சம் போக்கப்பட்டுள்ளது; வளர்ச்சியை வேகப்படுத்தும் விதமாக பட்ஜெட் அமைந்துள்ளது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க பட்ஜெட் வழி செய்யும்.

விவசாயிகளின் மூலதனம் 2 மடங்கு வருமானமாக அவர்களுக்கே வந்து சேரும் என கூறினார்.

#BJP | #UnionBudget | #Budget2018 | #IndianEconomy | #NarendraModi

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com