'வளர்ந்த பாரதம்' என்ற இலக்கை அடையும் நோக்கில் பட்ஜெட் தயாரிப்பு - பிரதமர் மோடி


வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடையும் நோக்கில் பட்ஜெட் தயாரிப்பு - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 22 July 2024 10:56 AM IST (Updated: 22 July 2024 10:59 AM IST)
t-max-icont-min-icon

'2047ம் ஆண்டில் வளர்ந்த பாரதம்' என்ற இலக்கை அடையும் நோக்கில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

டெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூட உள்ளது. இன்று தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பாஜக 3வது முறையாக ஆட்சியமைத்த பின்னர் முதன்முறையாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இதுவாகும்.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பிரதமர் மோடி கூறியதாவது,

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கான பாதையில் மத்திய அரசு தொடர்ந்து பயணிக்கும்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என நம்புகிறேன். இது முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தொடராக இருக்கும். எதிர்ப்பு அரசியலை எதிர்க்கட்சிகள் கைவிட்டு நாட்டின் வளர்ச்சிக்காக பணியாற்ற வேண்டும். நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இன்றைய பட்ஜெட் அடுத்த 5 ஆண்டுகளில் எங்கள் அரசு எந்த பாதையில் பயணிக்கிறது என்பதை முடிவு செய்யும். 2047ம் ஆண்டில் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடையும் நோக்கில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டுமொத்த நாடே எதிர்பார்க்கிறது

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story