இதுதான் சர்வாதிகாரம், இதுதான் அவசர நிலை - கெஜ்ரிவால் மனைவி காட்டம்

அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் இருந்து வெளியே வராமல் இருக்க முழு விசாரணை அமைப்பும் முயற்சிக்கிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கூறியுள்ளார்.
கெஜ்ரிவால் மனைவி சுனிதா
Published on

புதுடெல்லி,

மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையை அடுத்து, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து கெஜ்ரிவாலை கைது செய்தது. இதுதான் சர்வாதிகாரம். இதுதான் அவசர நிலை என கெஜ்ரிவால் மனைவி சுனிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜூன் 20ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்தது. அமலாக்கத்துறை உடனடியாக ஒரு தடையைப் பெற்றது. சி.பி.ஐ., அவரை குற்றவாளியாக்கி கைது செய்துள்ளது. அந்த நபர் சிறையிலிருந்து வெளியே வராமல் இருக்க முழு விசாரணை அமைப்பும் முயற்சிக்கிறது. இதுதான் சர்வாதிகாரம். இதுதான் அவசர நிலை என பதிவிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com