நான் இப்படிதான் யோகா செய்வேன்; கவனம் ஈர்த்த சுட்டிக்குழந்தையின் செயல்

ஓபரா ஹவுஸ், டைம்ஸ் சதுக்கம் உள்பட உலக நாடுகளிலுள்ள பல்வேறு பிரபல பகுதிகளிலும் யோகா நிகழ்ச்சி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.
புதுடெல்லி,
உலகம் முழுவதும் 11-வது சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாப்பட்டது. ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற கருப்பொருளில் உலகில் உள்ள 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
விஞ்ஞானிகள் விண்வெளியிலும், விளையாட்டு வீரர்களும், கடற்படை கப்பல்களிலும், எவரெஸ்ட் சிகரம், கடல் பகுதிகள் என பல்வேறு இடங்களிலும், ஓபரா ஹவுஸ், டைம்ஸ் சதுக்கம் உள்பட உலக நாடுகளிலுள்ள பல்வேறு பிரபல பகுதிகளிலும் யோகா நிகழ்ச்சி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், டெல்லி செங்கோட்டை கடமைப்பாதையில் நேற்று நடந்த யோகா நிகழ்ச்சியில் சுட்டிக்குழந்தை ஒன்று பெற்றோருடன் வந்திருந்தது. எல்லோரும் தீவிர யோகா பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது, அது திரும்பி கொண்டு தன்போக்கில் வேறு வகையான யோகாவில் ஈடுபட்டது.
இது அனைவரையும் கவர்ந்தது. சின்ன வயதில் நாம் சொல்லும் விசயங்களை அப்படியே உள் வாங்கி கொண்டு அதனை குழந்தைகள் கேட்பது என்பதே அரிது. அதிலும், யோகாசனங்கள் போன்ற கடினம் வாய்ந்த விசயங்களை செய்யும்போது, அதிக ஆர்வத்துடனும், கவனத்துடனும் மேற்கொள்ள வேண்டும். இந்த குழந்தை தன்னால் முடிந்த ஆசனம் ஒன்றை செய்து சுற்றியிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.