நாட்டின் முதல் மாநிலமாக 100 சதவீதம் எழுத்தறிவு பெற்று மிசோரம் சாதனை

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அம்மாநிலத்தில் 91.33 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றிருந்தனர்.
நாட்டின் முதல் மாநிலமாக 100 சதவீதம் எழுத்தறிவு பெற்று மிசோரம் சாதனை
Published on

ஐஸ்வால்,

இந்தியாவில் முழு கல்வி அறிவு பெற்ற முதல் மாநிலம் என்ற சாதனையை மிசோரம் படைத்துள்ளது.இதனை மிசோரம் மாநில முதல்-மந்திரி லால்டுஹோமா அறிவித்தார். மிசோரம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மத்திய கல்வித் துறை இணை மந்திரி ஜெயந்த் சவுத்ரி முன்னிலையில், அம்மாநில முதல்-மந்திரி இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் பேசியதாவது:-

நாட்டின் முதல் மாநிலமாக 100 சதவீதம் எழுத்தறிவு பெற்று மிசோரம் சாதனை படைத்துள்ளது. மாநில மக்களுக்கு வாழ்த்துகள். நாம் நாட்டில் முதலிடத்தில் இருப்பதில் பெருமைப்படுகிறோம். மேலும் சிறந்தவர்களாக இருக்க நாம் பாடுபடுவோம். இந்த அறிவிப்பு கற்றல் மற்றும் அதிகாரமளிப்பின் ஒரு புதிய அலையைத் தூண்டட்டும். ஒரு புத்திசாலித்தனமான, வலுவான மற்றும் ஒன்றுபட்ட மிசோரத்தை நோக்கி நாம் முன்னேறுவோம் என்றார்.

கடந்த 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மிசோரம் மாநிலத்தின் எழுத்தறிவு விகிதம் 91.33 சதவீதமாக இருந்தது. ப்போது மிசோரம் மாநிலம் நாட்டிலேயே அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட மூன்றாவது மாநிலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com