

பெங்களூரு
மேற்கு வங்காளத்தில் 3 முறை முதல்-மந்திரியாக பதவி வகித்த மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் சமீபத்திய தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளது.
இதுபற்றி கர்நாடகாவின் முதல்-மந்திரி சித்தராமையா செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, 15 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர் மம்தா பானர்ஜி. ஆனால் ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை இந்த தேர்தலில் பெரும் பங்காற்றியிருக்கும் என நான் உணருகிறேன் என்றார்.
மேற்கு வங்காளத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு தீவிர சீர்திருத்த பணியால், வாக்காளர் பட்டியலில் இருந்து 91 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டன. இதுவும் கூட அவருடைய தோல்விக்கு ஒரு காரணியாக இருக்க கூடும் என்று கூறினார். கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று உள்ளது. இதுபற்றி குறிப்பிட்ட சித்தராமையா, இது ஆச்சரியம் அளிக்கும் முடிவு.
நாங்கள் கேரளாவில் அதிகம் எதிர்பார்த்தோம். எதிர்பார்த்ததற்கும் மேலாக எங்களுக்கு கிடைத்துள்ளது என்று கூறினார். மேற்கு வங்காளத்தின் பதவிக்காலம் மே 7-ந்தேதியுடன் முடிவடைய உள்ள சூழலில், மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்பட்டது. வரலாறு காணாத வகையில் 2 கட்ட தேர்தலிலும் 90 சதவீதத்திற்கும் கூடுதலாக வாக்குகள் பதிவாகின.