

புதுடெல்லி,
வங்கியில் மோசடி செய்தவர்களில் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் 50 பேரின் விவரங்களை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டது. சமூக ஆர்வலர் சாகத் கோகலே என்பவர் , தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக இந்தத் தகவல்களை ரிசர்வ் வங்கியிடம் கோரினார். இதையடுத்து ரிசர்வ் வங்கி தகவல்களை வெளியிட்டது. இதில் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி உள்ளிட்டோரது பெயர்களும், அவர்களது நிறுவனங்களும் கடன் விவரமும் இடம்பெற்றுள்ளன.
இந்த விவகாரத்தை வைத்து மத்திய அரசை கடுமையாக சாடியுள்ள ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
நான் நாடாளுமன்றத்தில் மிக எளிதான கேள்வியைத் தான் கேட்டேன். வங்கிக் கடன் மோசடி அதிகம் செய்த முதல் 50 பேரின் பட்டியலை வெளிளியிடுமாறு கூறினேன்.
இதற்கு நிதியமைச்சர் பதில் ஏதும் அளிக்கவில்லை. தற்போது ரிசர்வ் வங்கி விவரங்களை வெளியிட்டு விட்டது. அந்த பட்டியலில் நீரவ் மோடி, மெகுல் சோக்சி உள்பட பாஜகவின் நண்பர்கள் இடம்பெற்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் இதனால்தான் இந்த விவகாரத்தில் உண்மை மறைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.