இது எமர்ஜென்சி காலத்தை விட மிக மோசமானது - அரவிந்த் கெஜ்ரிவால்

ஞானேஷ் குமாருடன் மோடியும் பதவி விலக வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால்
Published on: 

புதுடெல்லி,

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் பதவி விலக வலியுறுத்தும் போராட்டத்தில் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் விவகாரத்தில் தலைமை தேர்தல் கமிஷ னர் ஞானேஷ் குமார் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டதாகவும், அவர் பதவி விலக கோரியும் காங்கிரசார் மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் 3-வது நாளாக போராடி வருகிறது. நேற்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தியபின்பு, ஜனாதிபதி மாளிகைக்கு பேரணியாக சென்றனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். நாடாளுமன்றத்துக்கும். ஜனாதிபதி மாளிகைக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள விஜய் சவுக் பகுதியில் அவர்கள் கோரிக்கையை முன்வைத்து கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலை வர் மம்தா பானர்ஜி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்டு பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, ஜம்மு காஷ்மீர் மாநில முதல்-மந்திரி உமர் அப் துல்லா, தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்பட 10 பேர் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து மனு அளித்தனர்.

பிரியங்கா காந்தி உள்ளிட்ட மற்ற எம்.பி.க்கள் அனைவரும் விஜய் சவுக் பகுதியில் கூடியி ருந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் கர்நாடக மாநில முதல் மந்திரி சிவகுமார், இமாசல பிரதேச மாநில முதல்-மந்திரி சிக்விந்தர்சிங் சுகு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் டெல்லி முன்னாள் முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில்,

இது அவசர நிலைக் காலத்தைவிட மோசமானது. இது அதிகாரப்பூர்வமானது. நாம் மோடியின் முழுமையான சர்வாதிகார ஆட்சியின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விமானத்திலிருந்து இறங்கிய உடனேயே 'கரப்பான் பூச்சிகளை' கைது செய்வது, முன்னெப்போதும் இல்லாத அளவிலான அச்சத்தை வெளிப்படுத்துகிறது.

வாக்குத் திருட்டு மூலமாகவே தான் வெற்றி பெற்றோம் என்பது பிரதமர் மோடிக்குத் தெளிவாகத் தெரியும். இப்போது ஜனநாயகத்தை முற்றிலுமாக நசுக்குவதன் மூலம் அந்த மோசடியைப் பாதுகாப்பதில் அவர் தீவிரமாக உள்ளார். ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்; ஆனால் மோடியும் பதவி விலக வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே அரவிந்த் கெர்ஜிவால் வீட்டின் முன்பாக டெல்லி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர் வீட்டுக் காவலில் வைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com