தூத்துக்குடி துப்பாக்கி சூடு: தமிழக அரசுக்கு எதிராக ஜனாதிபதி அலுவலகத்தில் மனு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தமிழக அரசுக்கு எதிராக அகில இந்திய மக்கள் நல கழகம் என்ற அமைப்பு சார்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு: தமிழக அரசுக்கு எதிராக ஜனாதிபதி அலுவலகத்தில் மனு
Published on

புதுடெல்லி,

தமிழ்நாட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அகில இந்திய மக்கள் நல கழகம் என்ற அமைப்பு சார்பில் அதன் தலைவர் பி.சிவகுமார் டெல்லியில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. திட்டமிட்டே அப்பாவி மக்களை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தால் அரசு எந்திரம் தோல்வி அடைந்து விட்டது. எனவே, தமிழக அரசியலமைப்பு எந்திரத்தை தடை செய்ய கவர்னருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com