தூத்துக்குடி துப்பாக்கி சூடு : அதிகாரிகள் சொத்து விவர சேகரிப்புக்கு எதிரான மனுவை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு

விசாரணையை ஏப்ரல் 30-ந் தேதிக்கு தள்ளி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு : அதிகாரிகள் சொத்து விவர சேகரிப்புக்கு எதிரான மனுவை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு
Published on

புதுடெல்லி,

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது.

அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை 3 மாதங்களுக்குள் சேகரிக்கும்படி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு ஜூலை 15-ந் தேதி உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவுக்கு தடைவிதிக்கக் கோரி, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜோய்மாலா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று மீண்டும் விசாரிக்க இருந்தது. நேரமின்மை காரணமாக விசாரணையை ஏப்ரல் 30-ந் தேதிக்கு தள்ளி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com