வெளிநாடு செல்பவர்களின் பணி பாதுகாப்பிற்கு முழுமையான குடியேற்ற சட்டம் தேவை - பினராயி விஜயன்

வெளிநாட்டிற்கு வேலை வாய்ப்புக்காக செல்பவர்களின் பணி பாதுகாப்பு மற்றும் நலனுக்காக விரிவான குடியேற்ற சட்டம் அவசியம் என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு செல்பவர்களின் பணி பாதுகாப்பிற்கு முழுமையான குடியேற்ற சட்டம் தேவை - பினராயி விஜயன்
Published on

திருவனந்தபுரம்,

கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் ஐரோப்பா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். லண்டனில் லோகா கேரளா சபாவின் ஐரோப்பா-இங்கிலாந்து மண்டல மாநாட்டை துவக்கி வைத்தார்.

இது தொடர்பாக முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், வெளிநாட்டிற்கு வேலை வாய்ப்புக்காக செல்பவர்களின் பணி பாதுகாப்பு மற்றும் நலனுக்காக விரிவான குடியேற்ற சட்டம் அவசியம். கேரள மக்கள் அனைவரையும் வெளிநாடுகளுக்கு அனுப்புவது அரசின் கொள்கை அல்ல. மாறாக இங்குள்ள வளர்ச்சியின் மூலம் புதிய கேரளாவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மாநிலத்தில் கல்வித்துறையை மேலும் வலுப்படுத்துவதும், கேரளாவை உயர்கல்வியின் மையமாக மாற்றுவதும் தனது அரசின் நோக்கமாகும். கேரளாவின் தொழில்துறையில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் யோசனைகள் மற்றும் ஆதரவை வழங்க வேண்டும்.

பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் சட்டப்பூர்வமான வழிகள் மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் போன்ற சுகாதாரப் பணியாளர்களின் சுமூகமான இடப்பெயர்வை செயல்படுத்துவதே இதன் நோக்கமாகும். கேரளா-இங்கிலாந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தின், முதல் கட்டமாக சுகாதாரத் துறையில் 3 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உருவாக்கப்படும்.

இது தொடர்பான பணிகள் முடிந்தவுடன் வருகிற நவம்பர் மாதத்தில் ஒரு வார கால வேலைவாய்ப்பு விழாவை நடத்த திட்டம் உள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com