

ராஞ்சி,
ஜார்கண்ட் மாநிலத்தில் ரகுபர் தாஸ் தலைமையிலான பா.ஜனதா அரசு நடந்து வருகிறது. அம்மாநிலத்தின் தியோகர் மாவட்டம் சரத் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி ரகுபர் தாஸ் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-
காஷ்மீர் மாநிலத்தின் மேம்பாட்டுக்கு 370-வது பிரிவு முட்டுக்கட்டையாக இருந்ததால், அந்த பிரிவை மத்திய அரசு நீக்கியது. ஆனால் அதை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் போன்ற கட்சிகளின் தலைவர்கள் எதிர்க்கிறார்கள்.
அப்படி எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள். அந்த நாட்டில் பிரதமராகவோ, முதல்-மந்திரியாகவோ, எம்.எல்.ஏ.வாகவோ ஆகிக் கொள்ளுங்கள். எனவே, மேற்கண்ட கட்சிகள் இங்கு ஓரிடத்தில் கூட வெற்றிபெற விடக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.